
தாப்பா, நவ 16 – இரு வாரங்களுக்கு முன்பு போதைப் பொருளை விநியோகித்ததன் தொடர்பில் கைதான ஐந்து சகோதரர்கள் உட்பட் அறுவர், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
23 வயது எஸ் ரதீஸ்வரன், 21 வயது சுதேந்திரன், 20 வயது எஸ் ஶ்ரீதரன், 18 வயது எஸ். சுதேசன் ஆகியோருடன் அவர்களது 17 வயதான தம்பியுடன், மியன்மார் ஆடவன் ஒருவன், மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பத்தாங் படாங், செண்டிரியாங் துணை மாவட்டத்தில், செம்பனைத் தோட்டமொன்றில் 37.2 கிலோகிராம் எடையிலான மீதாம்பேட்டமைன் (Methampetamine) வகை போதைப் பொருளை விநியோகித்ததாக அந்த அறுவறும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
சாகும் வரை தூக்குத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பவர்களை, வழக்கறிஞர் ரஜிட் சிங் பிரதிநிதிக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உத்தரவாதத்தில் விடுவிக்கப்படவில்லை. இந்த வழக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி செவிமடுக்கப்படும் .