Latestஉலகம்

ஒசிஐ கார்டு இருந்தால் இந்தியா வரலாம்!

புதுடில்லி, அக் 23 – இந்திய அரசாங்கம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கிறது. கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை இந்தியா அமல்படுத்தியிருந்தது.

இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கும் இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இதன்படி இனி சுற்றுலா விசா, மின்னணு விசா, மருத்துவ விசா நீங்கலாக வெளிநாடுவாழ் இந்தியர் அடையாள அட்டை , இந்திய வம்சாவளியினர் வைத்திருக்கும் அனைத்து வகை விசாக்களும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வந்தே பாரத் திட்டம் அல்லது வர்த்தக பயன்பாடு அல்லாத பயணிகள் உடன்பாட்டு விமான சேவைகளில் தாயகம் வருவதற்கும் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வதற்கோ இனி தடை இருக்காது என்று இந்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இந்த பயணிகள் அனைவரும் இந்திய சுகாதார அமைச்சின் கோவிட் தடுப்பு வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்றி இருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு செல்ல விரும்பும் வெளிநாட்டினர் மருததுவ விசாவக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதோடு ஏற்கனேவே அவர்களிடம் இருந்துள்ள விசா காலாவதியாகி இருநதால் இந்திய தூரகத்திடம் விண்ணம் செய்யலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!