Latestமலேசியா

ஓப்ஸ் நடவடிக்கை 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தைப்பிங், அக் 23- ஓப்ஸ் சம்சேங் (Ops Samseng) நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 42 மோட்டார் சைக்கிளோட்டிகள் சுமார் ஒரு மணி நேரம் பத்து கூராவ் போலீஸ் நிலையத்திற்குத்  தங்களது மோட்டார் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு செல்லும்படி பணிக்கப்பட்டனர்.

நேற்று மாலை மணி 5 முதல் இரவு 10 மணிவரை தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 134 பேருக்கு குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஒஸ்மான் மாமாட் கூறினார்.

இந்த நடவடிக்கையின்போது 98 மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. 42 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியது, பதிவு எண்கள் மற்றும் தலைக் கவசம் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைக்கு ஏற்றபடி இல்லாமல் இருந்த குற்றத்திற்காகவும் அவர்களுக்கு குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!