Latestமலேசியா

கடனை திரும்பச் செலுத்துவதற்கான (Moratorium) கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிப்பீர் ;அரசுக்கு 25 எம்.பிக்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 23- கோவிட் தொற்றினால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வர்த்தகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு உதவும் பொருட்டு மோராடோரியம் ( Moratorium) எனப்படும் கடனை திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதை அமல்படுத்தும்படி அரசாங்கத்திற்கு எதிக்கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் முறையாக MCO அமல்படுத்தப்பட்டபோது மோராடோரியம் வர்த்கர்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் பெரும் உதவியாக இருந்தது. இப்போதைய MCO காலத்திலும் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் வேலையை பாதுகாப்பதற்கும் கடன்களை திருப்ப செலுதுவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்தால் வர்த்தகர்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் முக்கிய உதவியாக இருக்க முடியும் என அந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.

இதன் மூலம் தனிப்பட்ட நபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களுக்கு கூடுதலாக பணப்புழக்கம் கையில் இருக்க முடியும் என்பதோடு வர்த்தகத்தை மேம்படுதிக்கொள்வதற்கும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் பெரும் பங்காற்ற முடியும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதோடு 4,000 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானம் பெறுவோருக்கு இப்போது வழங்கப்பட்டுவரும் ஒரு தொழிலாளர்களுக்கு 600 ரிங்கிட் என்ற சம்பள உதவித் தொகை திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு சொக்சோ நீட்டிக்க வேண்டும் என்றும் அந்த நாடாளுமன்று உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர். வேலை வாய்ப்புக்ளை குறைக்காமல் இருப்பதற்கு சம்பள உதவித் திட்டம் முக்கிய பங்கை ஆற்றமுடியும் என அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் Penampang எம்.பி டேரல் லைக்கிங் (Darel Liking), மூவார் எம்.பி சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் ( Syed Saddiq Syed Abdul Rahman), சிகாம்புட் எம்.பி ஹனா இயோ, (Hannah Yeoh), Bakri எம்.பி யோ பீ யின் ( Yeo Bee yin ), பூலாய் எம்.பி சலாவுடின் அயோப் (Salahuddin Ayub ) ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!