Latestமலேசியா

கடுமையான நிபந்தனைகளுடன் எல்லையை கடந்த பயணங்களுக்கு சிங்கப்பூர் அனுமதி

கோலாலம்பூர், ஆக 2 – 7 நாட்கள் தனித்திருப்பது, கட்டப்படுத்தப்பட்ட பயணங்கள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு தடை உட்பட எல்லையையக் கடந்த பயணம் செய்பவர்களுக்கு சிங்கப்பூர் நிபந்தனைகளை விதித்துள்ளது. குறுகிய கால பணிகள் அல்லது அலுவல் நிமித்தமான பயணங்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கான இரண்டு கட்ட பயணத் திட்டங்கைளை மலேசியாவும் சிங்கப்பூரும் தற்போது வரைந்து வருகின்றன.
இரு நாடுகளையும் சேர்ந்த குடிநுழைவு துறையின் அகப்பக்கங்களில் அந்த இரண்டு பயண ஏற்பாட்டுக்கான நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான தேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது .பயணம் செய்வதற்கு தகுதி பெற்றவர்கள் கோவிட் 19 தொற்று பரவலுக்கான மற்றும் அதற்குரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னதாகவே சுகாதார பரிசோதனை , ஏழு நாட்கள் தனித்திருப்பது மற்றும் தொண்டையில் எச்சில் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அதோடு குறுகிய நாட்களுக்குள் சிங்கப்பூரிலிருந்து வெளியேற வேண்டும். நீண்ட கால பாஸ்கள் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் குறைந்தது மூன்று மாத காலம் சிங்கப்பூரில் தங்கியிருக்க வேண்டும். அதன் பின் குறுகிய கால விடுமுறையில் அவர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர். விடுமுறைக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு வருபவர்கள் 3 மாத காலத்திற்குப் பிறகு அங்கிருந்து வெளியேற முடியும் . இந்த இரண்டு பயணத் திட்டங்களுக்கான கட்டுப்பாடுகளில் மாணவர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் சப்பந்தப்பட்டிருக்கமாட்டார்கள்
அனைத்து வருகையாளர்களும் சிங்கப்புர் வந்துச் சேர்ந்தவுடன் கோவிட் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன் அனைத்து வருகைகளுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். 14 நாட்களுக்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட பயண அட்டவணையை கொண்டிருக்க வேண்டும். டாக்சி மற்றும் வாடகை கார்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். பொது வாகனங்கள் பயன்படுத்துவற்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!