Latestமலேசியா

கட்சி தாவுவதை நிறுத்திக்கொண்டு சமுக –பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பீர் – பெட்ரோய்ட் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக.1 – சபா அரசியல்வாதிகள் கட்சி தாவுவதில் குறியாக இருப்பதைவிட அம்மாநில மக்களின் சமுக பொருளாதார நிலையை மேம்படுத்துதில் தீவிர கவனம் செலுத்தும்படி பெட்ரோய்ட் எனப்படும் தேசிய விசுவாச சங்கம் கேட்டுக்கொண்டது. சபா மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மாநிலத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசியல்வாதிகள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என பெட்ரோய்ட்டின் தலைவர் டத்தோ முகமட் அர்ஷாட் ராஜி வலியுறுத்தினார்.

சபா பல்வேறு வளங்களை கொண்டிருந்தாலும் மலேசியாவில் இன்னமும் பின்தங்கிய வட்டாரமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். சமுக பொருளாதார பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.பல ஆண்டுகாலமாக சபாவில் குடியேறிகள் விவகாரத்திற்கும் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணப்படாததால் அது பாதுகாப்புக்கு மட்டுமின்றி சமுக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதையும் முகமட் அர்ஷாட் சுட்டிக்காட்டினார். சபாவின் நடப்பு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் ஷாபி அப்டால் புதிய தேர்தலை நடத்தும்பொருட்டு சட்டமன்றத்தை கலைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!