Latestசினிமா

கணவருடன் தகராறா? தனது பெயரிலிருந்து கணவரின் பெயரை நீக்கிய சமந்தா

சென்னை, ஆக 12- சமந்தா தன் டுவிட்டர் பக்கத்திலிருந்த கணவரின் குடும்பப் பெயரை நீக்கியிருப்பது அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த சமந்தா தமது முதல் பட கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் தன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தன் கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு சமீபத்தில் சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ படம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்திருந்தாலும் அந்தத் தொடரில் அவருடைய நடிப்பு நாகசைதன்யாவுக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் கணக்கின் பெயரை வெறும் ‘S’ என மாற்றியிருக்கிறார் சமந்தா. கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சமந்தா கணவரின் குடும்பப் பெயரை நீக்கினாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

எது எப்படியிருப்பினும், சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரியவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!