Latestஇந்தியாஉலகம்

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? மனைவியின் வயிற்றை அறுத்துப் பார்த்த கணவன் கைது!

லக்னோ, செப் 22 -ஏற்கனவே ஐந்து பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், அடுத்து பிறக்கப் போகும் குழந்தையும் பெண்ணாக இருந்து விடுமோ என்ற பயத்தில், தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்துப் பார்த்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் உத்திர பிரதேசத்திலுள்ள புடாவுன் (Budaun) மாவட்டத்தில் இக்கொடுமை அரங்கேறியுள்ளது.

ஆறாவதாகத் தமக்குப் பிறக்கப் போகும் பிள்ளை, ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ள முடிவெடுத்து அவ்வாடவர், அரிவாளில் தமது மனைவியின் வயிற்றை அறுத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயத்திற்கு ஆளான அந்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண், புதுடெல்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!