Latestமலேசியா

கான்கிரீட் கல் விழுந்த சம்பவம்: CIDBயின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறது பொதுப்பணி அமைச்சு!

கோலாலம்பூர், செப் 22 – கடந்த வாரம், SUKE எனும் சுங்கை பெசி-உலு கிளாங் அடுக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்ட பகுதியிலிருந்து கான்கிரீட் கல் விழுந்த சம்பவம் தொடர்பில், CIDB எனும் மலேசிய கட்டுமானத் தொழிற்துறை மேம்பாட்டு வாரியத்தின் முழுமையான விசாரணை அறிக்கைக்காகத் தமது தரப்பு காத்திருக்கின்றது.
விசாரணை முடிவுகள் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க முடியும் என பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் (Datuk Seri Fadillah Yusof) தெரிவித்தார்.

அக்கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பு கண்காணிப்பு முறை, போக்குவரத்து நிர்வாகம், நெடுஞ்சாலை வடிவமைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கி, அவ்விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார்.
DOSH எனப்படும் வேலையிட சுகாதார-பாதுகாப்புத் துறையும் அவ்விசாரணையை மேற்கொண்டு வருகின்றது. எனவே அவ்விரு தரப்புகளின் விசாரணை முடிவுகளைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை அமைச்சு அறிவிக்கும் என டத்தோஸ்ரீ ஃபாடில்லா கூறினார்.

கடந்த சனிக்கிழமை MRR2 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் நிர்மாணிப்பில் இருந்த SUKE நெடுஞ்சாலையின் கான்கிரீட் சுவர் கல், கீழே சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்ததில், அக்காரின் ஓட்டுனரான பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!