Latestமலேசியா

கான்கிரீட் தூண் விழுந்து உடல் நசுங்கி வங்காளதேச ஆடவர் பலி

நிபோங் தெபால், டிச 4 -பினாங்கில், இன்று காலை மணி பத்து அளவில்,   சிம்பாங் அம்பாட், வால்டோர் ( Valdor )  தொழிற்துறைப் பகுதியில், கட்டுமானத் தளத்தில் கான்கிரீட்  தூண் ஒன்று விழுந்து வங்காளதேச  தொழிலாளி உயிரிழந்தார்.
அந்த கட்டுமானத் தள விபத்தில் இந்தோனேசிய தொழிலாளர்  ஒருவர்  காயமடைந்தார்.

தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே, கான்கிரிட் தூணிற்கு கீழ் சிக்கிக் கொண்ட  இந்தோனேசிய ஆடவரை, பணியில் இருந்த இதர தொழிலாளர்கள் மீட்டனர்.

இவ்வேளையில்,  உடல் சிக்கிய  வங்காளதேச ஆடவரை  மீட்க ,  சிறப்புக் கருவியைக் கொண்டு கான்கிரீட் தூணை அகற்றியதாக ,  பினாங்கு தீயணைப்பு மீட்பு படையின்  நடவடிக்கை பிரிவின் அதிகாரி  முகமட் நஜீப் ஹஷீம்  தெரிவித்தார்.

அந்த நபரை தூணுக்கு அடியில் இருந்து வெளியே கொண்டு வர  30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில்,    கடுமையான  காயங்களால்  அவர் உயிரிழந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!