Latestமலேசியா

காலாவதியான பொருட்கள் சந்தையில் அதிகமாக விற்பனை; எச்சரிக்கையாக இருக்கும்படி பி. ப .ச அறைகூவல்

ஜோர்ஜ் டவுன், ஜன.23 – சந்தைகளில் காலாவதியான பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. கோவிட் 19 தொற்று தொடங்கிய காலகட்டத்திலிருந்து பலதரப்பட்ட பொருட்கள் விற்கப்படாமல் இருந்துள்ளன. அவற்றின் விற்பனை காலமும் முடிவு பெற்றுள்ளன. ஆனால் சில வியாபாரிகள் தங்கள் மனச்சாட்சிக்கு எதிராக இப்பொருட்களை பயனீட்டாளர்களின் தலையில் கட்டிவிடுவதாக பி.ப.சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.

ஒவ்வொரு பொருட்களுக்கும் கட்டாயம் காலாவதி அவகாசம் இருக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் அப்பொருள் விற்கப்பட்டு விட வேண்டும். அப்படி விற்பனை செய்யப்படாத பொருள் அந்த காலாவதியான தேதிக்கு பிறகு விற்பனை செய்யப்படக்கூடாது.  ஆனால், சில கடைகாரர்கள் அப்படிப்பட்ட பொருட்களை பயனீட்டாளர்களிடம் விற்று விட்ட சம்பவங்கள் இந்த கோவிட் கால கட்டத்தில் அதிகமாக நடைபெற்றுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.

குறிப்பாக, ரெட்டிகள், சாடின் வகைகள், பிஸ்கட், மிட்டாய், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள், சாக்லட் போன்றவை அடங்கும் என்றார் சுப்பாராவ்.

அதிகமாக தினமும் சாப்பிடும் வெள்ளை ரெட்டியின் காலாவதி தேதியை பயனீட்டாளர்கள் அடிக்கடி சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கப்படும் பல பேக்கட் உணவுகள் காலாவதியான காலக்கட்டதிற்க்கு பிறகும் விற்க்கப்படுவதாக தங்களுக்கு புகார் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சில கடைகளில் இதுபோன்ற சாக்லட் உணவுகள் விற்க்கப்படுவது தங்களின் ஆய்வில் உறுதிபடுத்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார் அவர். காலாவதியான பொருட்களை உண்பதால் பலதரப்பட்ட சுகவீனங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூரினார்.

அதிகமான காலாவதியான பொருட்கள் விற்க்கப்படுவதாக தெரிவந்தால் உள் நாட்டு வானிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க பிரிவிடம் புகார் செய்யும்படி அவர் ஆலோசனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!