
கோலாலம்பூர், டிச 9- குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாது. கோவிட் -19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் சுமையிலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை.
இந்த நிலையில் குடிநீர் கட்டணத்தை அதிகரிப்பது பொருத்தமானதாக இல்லையென சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.