Latestமலேசியா

குற்றச்சாட்டு எதுவுமின்றி 29 பேரை 2 மாதமாக தடுத்து வைப்பதா? – டாக்டர் ராமசாமி

ஜோர்ஜ் டவுன், நவ 12- கைது செய்யப்பட்டது முதல் கடந்த 2 மாத காலமாக குற்றச்சாட்டு எதுவுமின்றி 29 நபர்களை சிலாங்கூர், பந்திங்கிலுள்ள லோக்கப்பில் தடுத்து வைத்துள்ளது குறித்து போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என ஜ.செ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராமசாமி கோரிக்கை விடுத்தார். துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனல் என்ன காரணத்திற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் இன்னமும் தெரிவிக்கவில்லை.

விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கும் 2012ஆம் ஆண்டின் சொஸ்மா ( Sosma) சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என ராமசாமி சந்தேகம் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அவர்களது குடும்பத்தினர் கேட்கும்போதெல்லாம் போலீசார் மௌனம் சாதிப்பதாக பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதல்வருமான ராமசாமி தெரிவித்தார்.
அந்த 29 பேரையும் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அவர்கள் இன்னமும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தமக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாவும் அவர் சொன்னார். அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் எந்தவொரு தாமதம் இன்றி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என ராமசாமி கேட்டுக்கொண்டார்.

உண்மையிலேயே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் இதன் விவரங்களை பொதுமக்களுக்கு போலீசார் தெரிவிக்கலாம். அந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருக்குமால் எந்தவொரு தாமதமின்றி அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்ட வேண்டும் என தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் ராமசாமி கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!