Latestமலேசியா

கூச்சிங்கில் 14 வயது பையனை விழுங்கிய முதலை பிடிப்பட்டது

கூச்சிங்,  ஜூலை 31 –  சரவாவில் தஞ்சோங் மனிசில் 14 வயது பையனை  விழுங்கிய 4.5 மீட்டர் நீளம் கொண்ட  முதலை இன்று காலை, தேடும் மற்றும் மீட்பு குழுவினரால்  பிடிக்கப்பட்டது.  அந்த முதலையின் வயிற்றில்  மனித எலும்புகள், சதைகள் மற்றும் துணிகளும் இருந்தன.   காணாமல்போன   ரிக்கி அன்னாக்  கன்யா  (RICKY ANAK  GANYA ) என்ற பையன்  அணிந்திருந்த  உடைகள் அந்த முதலையின் வயிற்றில் காணப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டது.

ரிக்கி ஆகக்கடைசியாக காணப்பட்ட இடத்திலிருந்து  மூன்று மீட்டர் தொலைவில் பொறியின் தூண்டிலில் வைக்கப்பட்ட கோழியை அந்த முதலை உட்கொண்டபோது அது சிக்கியது.  வனவிலங்குத் துறையைச் சேர்ந்த குழுவினர் அந்த முதலையை பிடிக்கும் முயற்சியில்  அதற்கான பொறியை வைத்தனர்.

ஜூலை 26ஆம் தேதி காலை மணி  11.30 அளவில் ரிக்கி தனது அத்தை மற்றும் மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன்  ஆற்றில்  நத்தைகளை தேடிக் கொண்டிருந்தபோது ரிக்கியை முதலை இழுத்துச் சென்றது. இந்த  சம்பவத்தை ரிக்கியின் அத்தை நேரடியாக பார்த்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து  தீயணைப்பு வீர்ர்கள், போலீஸ்,  சிவில் தற்காப்புத்துறை, வனவிலங்குத் துறை, சரவா காட்டு வளத்துறை, டுடாட் நீண்ட வீடுகள் குடியிருப்பு வாசிகளைக் கொண்டு  தேடும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.  ரிக்கியை  இழுத்துச் செல்வதற்கு  24  மணி நேரத்திற்கு முன்னதாக ஆற்றில் படகை கழுவிக்கொண்டிருந்த மற்றொரு நபரையும் அம்முதலை  இழுத்துச் சென்றது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!