Latestமலேசியா

கூட்டம் அதிகமானது; அயர் ஹித்தாம் சந்தைக்கு செல்லும் சாலை மூடப்படும்

ஜோர்ஜ்டவுன், ஜன 14 – அயர் ஹித்தாம்  (Ayer Itam) பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள பாயா தெருபோங் சாலை,  (Jalan Paya Terubong ) நாளை காலை தொடங்கி மூடப்படும்.

மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காகவும், அந்த சந்தையில் வாடிக்கையாளரின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும்,  அந்த சாலை மூடப்படுவதாக  திமூர் லாவுட் ( Timur Laut) மாவட்ட  போலீஸ் தலைவர்,  துணை ஆணையர் சொஃபியான் சந்தோங் (SOFFIAN SANTONG ) தெரிவித்தார்.

கம்போங் பிசாங் ( Kampung Pisang) கிராமத்தில் இருந்து அயர் ஹித்தாம் (Ayer Itam ) பகுதியை நோக்கிச் செல்லும் சாலையும்,  அயர் ஹித்தாம் பகுதியை நோக்கிச் செல்லும் மற்றொரு பாதையும்  காலை மணி ஆறு தொடங்கி மதியம் மணி இரண்டு வரை மூடப்படும்.

அந்த சாலைகளில், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேருந்துகள் செல்ல  அனுமதியில்லை. பாதாரிசார்கள் மட்டுமே அந்த பாதைகளைப் பயன்படுத்த முடியும்.

அப்பகுதியில் இன்று காலை மணி 8.30-க்கு மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பில்,   அன்றாட பொருட்களை வாங்குவதற்காக, மக்கள் கூட்டம் கூட்டமாக  வெளியேறியதைக் காண முடிந்தது. மேலும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!