Latestமலேசியா

கே.எல். ஐ.ஏவின் குடிநுழைவுத்துறை துணை இயக்குனர் உட்பட 3 அதிகாரிகள் கைது

கோலாலம்பூர், நவ 21 – கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் குடிநுழைவுத்துறையின் துணை இயக்குனர் உட்பட மூன்று குடிநுழைவு அதிகாரிகளை எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசியா ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. பொய்யான பயண ஆவணங்கள் தயாரித்ததன் தொடர்பில் ஒப்ஸ் செலாட் எனப்படும் நடவடிக்கையின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

34 மற்றும் 54 வயதுக்குட்பட்ட அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளும் நேற்று எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கும் உத்தரவை பெறுவதற்காக புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

நவம்பர் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட ஓப்ஸ் செலாட் நடவடிக்கையின் கீழ் கே.எல்.ஐ.ஏ, கே.எல்.ஐ.ஏ 2 மற்றும் ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் கட்டடம் ஆகிய இடங்களில் பணியாற்றி வந்த 33 குடிநுழைவு அதிகாரிகள் உட்பட இதுவரை 53பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிநுழைவுத் துறையின் ஒத்துழைப்போடு புத்ரா ஜெயா, ஜோகூர் பாரு, கூச்சிங், கோத்தா கினபாலு ஆகிய இடங்களில் எம்.ஏ.சி.சி ஓப்ஸ் செலாட் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆவணங்களை பொய்யாக்கியது தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எம்.ஏ.சி.சி விசாரணைப் பிரிவின் இயக்குனர் நோரஸ்லான் முகமட் ரசாலி இதற்கு முன் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!