Latestஇந்தியா

கொடூரக் குற்றவாளி Vikas Dubey போலிசாரால் சுட்டு கொலை

உத்திர பிரதேசம், ஜூலை 11 – இந்தியாவின் கொடூரக் குற்றவாளி என வர்ணிக்கப்பட்ட Vikas Dubey-யை உத்திரப் பிரதேச போலிசார் சுட்டுக் கொன்றனர். கொளை, கடத்தல், கலவரம் போன்ற 60க்கும் பேற்பட்ட குற்றசாட்டுக்கள் அவன் மீது இருந்த நிலையில் அண்மையில் அவனைப் பிடிக்கச் சென்ற போது 8 போலிசாரை Vikas Dubey சுட்டுக் கொன்றான்.
தலைமறைவாகிய அவனை போலிசார் வியாழக்கிழமை அன்று மத்திய பிரதேசத்தில் பிடித்தனர். Vikas-சை உத்திர பிரதேசத்திற்கு காரில் கொண்டு சென்றபோது கார் திடிரென கவிழ்ந்தது. அப்போது Vikas அதிலிருந்த போலிசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்களை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோடியதாக போலிசார் தெரிவித்தனர். சரணைடைய பணித்தும் அவன் மறுத்து போலிசார் மீது சுட்டதால், அவனை திறும்ப சுட்டுக் கொன்றதாக போலிசார் தெரிவித்தனர். பலர் போலிசாரின் நடவடிக்கையை பாராட்டியிருந்தாலும் சிலர் அவர்கள் கூறும் கருத்து எந்த அளவுக்கு உண்மை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!