Latestஇந்தியா

கொரோனாவின் புகழ் ஓங்கட்டும் : பிறந்த குழந்தைகளின் பெயர் கொரோனா குமார், சனிட்டைசர் குமாரி!

லக்னோ, அக் 1 – உத்தர பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்புடைய பெயர்களை வைப்பது தற்போது பிரபலமாகியிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோர், கொரோனாவை நினைவுகூரும் பெயர்களைச் சூட்டி வருகின்றனர்.

அவ்வகையில் சஹரண்பூர் (Saharanpur) எனும் நகரில் பிறந்த பெண் குழந்தையொன்றுக்கு சானிட்டைசர் குமாரி என பெயர் வைக்கப் பட்டுள்ளதாம். மற்றொரு தம்பதியர், தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த பெயரை வைக்கும் அளவுக்கு கொரோனா குமார் என்ற பெயரும் இந்தியாவில் பிரபலமாகியிருக்கிறதாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!