Latestமலேசியா

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் சிவகுருவின் உடல் மீட்பு; சந்தேக நபர் கைது

பாலிங், டிச 4 – இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆடவரின் உடல் இன்று மீட்கப்பட்டது. கோலா கெட்டிலைச் சேர்ந்த 32 வயதுடைய சிவகுருவின் உடல் இன்று காலை 10 மணியளவில் சுற்று வட்டார மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சிவகுரு இறந்து கிடந்ததாக பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்பிரிடெண்டன் சைட் பஸ்ரி சைட் அலி தெரிவித்தார்.  சிவகுரு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக 30 வயது சந்தேக பேர்வழி ஒருவரை போலீசார் விசாரணைக்காக கைது செய்தனர்.

கோலா கெட்டில் சந்தையில் கோழிகளை விற்பனை செய்துவரும் தமது தயாருக்கு உதவிவரும் சிவகுரு இரவு வேளையில் பயன்படுத்தப்பட்ட அட்டைப் பெட்டிகளை சேகரித்த பின்னர் வழக்கமாக விடிற்காலை 4 மணிக்கு வீடு திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்தார். ஆனால், சம்பவத்தன்று சிவகுரு வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். சிவகுருவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!