Latestமலேசியா

கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டம் ; போக்குவரத்து குற்றங்களுக்கு சிறப்பு கழிவை வழங்குகிறது DBKL

கோலாலம்பூர், பிப்ரவரி 1 – கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வாகன நிறுத்துமிடக் குற்றங்கள் உட்பட போக்குவரத்து குற்றப்பதிவுகளுக்கு, DBKL – கோலாலம்பூர் மாநகர் மன்றம் சிறப்பு கழிவை வழங்குகிறது.

இம்மாதம் 29-ஆம் தேதி வரை, மலேசியர்களுக்கு அந்த சிறப்பு கழிவு வழங்கப்படுமென, தமது முகநூல் பதிவு வாயிலாக DBKL தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு பத்து ரிங்கிட், கார்களுக்கு 20 ரிங்கிட், MPV பல்நோக்கு வாகனங்களுக்கும், சிறு ரக லோரிகளுக்கும் 20 ரிங்கிட், பெரிய லோரிகளுக்கும், பேருந்துகளுக்கும் 50 ரிங்கிட் உட்பட அங்காடி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நூறு விகிதம் என அந்த சிறப்பு கழிவு வழங்கப்படுகிறது.

எனினும், கருப்பு பட்டியல் இடப்பட்ட அல்லது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அபராதங்களுக்கு அந்த கழிவு வழங்கப்படாது.

Pay@KL செயலி வாயிலாக பொதுமக்கள் அந்த அபராதங்களை செலுத்தலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!