Latestமலேசியா

கோல லங்காட், செப்பாங் ஆகியவற்றில் தண்ணீர் விநியோகத் தடை!

கோலாலும்பூர், செப் 16 – சிலாங்கூரின் கோல லங்காட் (Kuala Langat), செப்பாங் (Sepang) ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 இடங்களில் அட்டவணையிடப் படாத தண்ணீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.

கேஎல்ஐஏ (KLIA) பள்ளிவாசலுக்கு அருகே பண்டார் ஸ்ரீ ஏசான் (Bandar Sri Ehsan)னில் தண்ணீர் குழாய் உடைந்ததை அடுத்து, அதிகாலை ஒரு மணிக்கு அப்பகுதிகளில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப் பட்டதாக அயேர் சிலாங்கூர் கூறியது.

குழாயைப் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் விநியோகம் சீக்கிரமே வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக அயேர் சிலாங்கூர், அறிக்கை வழி தெரிவித்தது.

பாதிக்கப்பட்டிருக்கும் இடங்களில் தாமான் லங்காட் உத்தாமா (Taman Langat Utama), தாமான் முர்னிமாஸ் (Taman Murnimas), பண்டார் ஸ்ரீ ஏசான் (Bandar Sri Ehsan), தாமான் லங்காட் முர்னி (Taman Langat Murni), பண்டார் மாகோத்தா ( Bandar Mahkota) ஆகியவையும் அடங்கும்.

ஆகக் கடைசி நிலவரங்களை பொது மக்கள் www.airselangor.com எனும் அகப்பக்கம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!