
லண்டன், பிப் 23 – கோவக்ஸ் கோவிட் -19 தடுப்பு மருந்தால், ஒருவருக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க, WHO- உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதர பெறுநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஐநா, கோவக்ஸ் தடுப்பு மருந்தை 92 ஏழை நாடுகளுக்கு விநியோகிக்கிறது.
எனினும், அந்த மருந்தின் ஆற்றல் குறித்து சில நாடுகள் ஐயப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் , உலக சுகாதார அமைப்பு, பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு தரப்படுமென உறுதியளித்திருக்கிறது.