Latestமலேசியா

கோவிட்டினால் மரணம் அடைவதற்கு முன்னதாக தந்தை எழுதிய குறிப்பினால் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

கோலாலம்பூர். நவ 21- கோவிட்டினால் மரணம் அடைவதற்கு முன் ஆடவர் ஒருவர் தமது கைப்பட கிறுக்கிய குறிப்பு அவரது குடும்பத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமையன்று ஈப்போவிலுள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் 58 வயதுடைய ஆடவர் தமது கைப்பட தமது குடும்பத்திற்கு பிரியாவிடை குறிப்புகளை கிறுக்கியதுபோல் எழுதியுள்ளார். ‘….எனக்காக தொடர்ந்து பிரார்த்னை செய்யுங்கள். நான் மன்னிப்பு கோருகிறேன். ஒவ்வொருவரும் கவனமாக இருங்கள் ‘  என உயிர் பிரிவதற்கு முன்னதாக அகமட் அகமட் தாய்ப் குறிப்பை எழுதியிருந்தார்.

அவரது 32 வயது மகள் ஷபிகா ஹூமைராக் (Syafiqa Humairak) இந்த குறிப்பை தமது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த குறிப்பு வைரலானது. என் தந்தை நிரந்தரமாக உறங்கச் செல்வதற்கு முன் எழுதிய கடைசி குறிப்பை ஒவ்வொரு முறை பார்க்கும்போதெல்லாம் துக்கம் தாங்க முடியவில்லை என அந்த கடிதக் குறிப்பின் புகைப்படத்தை வெளியிட்டபோது கண்ணீர் மல்க ஷபிகா ஹூமைராக் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!