
நியூயார்க், பிப் 22- கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் இந்தியாவின் தலைமைக்கும், கோவிட் தடுப்பூசி உதவிக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர் Antonio Guterres (அண்டனியோ குட்டரெஸ்) தமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். மக்கள் தொகை பெருக்கத்தில் உலகின் இரண்டாவது பெரிய நாடு என்ற முறையில் இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று பெரும் அழிவை கொண்டுவரும் என ஐ.நா அச்சத்தையும் கவலைலையும் கொண்டிருந்தது.
ஆனால் இந்தியா சரியான நேரத்தில் விவேகமான நடவடிக்கையில் ஈடுபட்டு எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவ வசதிகளை மேம்படுத்தி உயிரிழப்புக்களை குறைத்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது. அதோடு ஒரே நேரத்தில் கோவிட் தொற்றுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ததோடு, சில நாடுகளுக்கும் அவற்றை உதவியாக வழங்கிய இந்தியாவின் நடவடிக்கை பாராட்டக்கூடியது என Antonio Guterres புகழாரம் சூட்டியதாக ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி தமது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.