Latestமலேசியா

சுங்கை பூலோவில் 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலி, எண்மர் காயம்

சுங்கை பூலோ, ஏப்ரல் 6 – சிலாங்கூர் சுங்கை பூலோவில் வெள்ளிக்கிழமை இரவு 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், ஒருவர் பலியான வேளை இருவர் படுகாயம் அடைந்தனர்.

சுங்கை பூலோ மருத்துவமனை அருகே PLUS நெடுஞ்சாலையின் 452.8-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் அறுவர் சிராய்ப்புக் காயங்களுக்கு இலக்காகினர்.

விபத்தில் சிக்கிய வாகனங்களில் 5 கார்கள், ஒரு 4WD வாகனம் மற்றும் ஒரு விரைவுப் பேருந்து அடங்கும் என தீயணைப்பு மீட்புத் துறை கூறியது.

உயிரிழந்தவர் அந்த 4WD வாகனமோட்டி என தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்த 8 பேரும் சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விரைவுப் பேருந்து ஓட்டுநரும், அதில் இருந்த 24 பயணிகளும் காயமடையவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!