Latestமலேசியா

கோவிட் உயர்வின் எதிரொலி மலேசியர்களுக்கான கட்டுப்பாட்டை சிங்கப்பூர் கடுமையாக்கியது

சிங்கப்பூர், நவ 21- மலேசியாவில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மலேசியாவுடனான தனது எல்லை நடவடிக்கைகளை சிங்கப்பூர் மேலும் கடுமையாக்கியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாள்ளிரவு மணி 11.59 முதல் சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் (டிரான்சிட் பயணிகள் உட்பட) 14 நாட்கள் மலேசியாவில் தங்கியிருந்து சிங்கப்பூருக்கு செல்பவர்கள் அந்த குடியரசில் தனிமைப்படுத்தும் வளாகங்களில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.
மலேசியா -சிங்கப்பூருக்குமிடையிலான பி.சி.ஏ எனப்படும் தங்கியிருந்து வேலை செய்வோர் , சிங்கப்பூருக்கு திரும்பி வரும் பயணிகளுக்கும் இது பொருந்தும்.

மலேசியாவிலிருந்து வரும் பயணிகள் சிங்கப்பூரில் 7 நாட்கள் SHN தனித்திருக்கும் உத்தரவை தங்களது இல்லங்களிலேயே பின்பற்ற வேண்டும் என இதற்கு முன் சிங்கப்பூர் குடியரசின் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டிருந்தது.
சபா தவிர மலேசியாவின் மற்ற பகுதிகளிலிருந்து சிங்கப்பூருக்கு செல்வோர் தங்களது வசிப்பிடத்தில் தனித்திருக்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

சபாவிலிருந்து சிங்கப்பூர் செல்வோர் தனிமைப்படுத்தும் மையங்களில் 14 நாட்களுக்கு SHN தனிமைப்படுத்தும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்புவாசிகள் அல்லாதோர் மலேசியாவில் கடந்த 14 நாட்கள் தங்கியியிருந்தால் , அவர்களும் சிங்கப்பூரில் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே கோவிட் பரிசோதனையை செய்திருக்க வேண்டும்.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு மணி 11.59 முதல் சிங்கப்பூருக்கு செல்வோருக்கு இந்த நடைமுறை அமல்படுத்தப்படும். சிங்கப்பூர் பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்புவாசிகளுக்கு விதி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர்- மலேசிய இடையிலான பி.சி.ஏ ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்கு திரும்பும் சிங்கப்பூரை சேர்ந்த பயணிகளுக்கு இது பொருந்தாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!