Latestமலேசியா

கோவிட் கண்காணிப்பில் இருந்துக்கொண்டு கடையில் உணவருந்திய பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர்

கோலாலம்பூர், ஜூலை 22 – ( PUS) எனப்படும் கோவிட் – 19 தொற்று தொடர்பாக கண்காணிப்பில் கீழ் இருந்துவரும் பெண் நோயாளி ஒருவர் வீட்டில் தனித்து இருக்கும்படி விடுக்கப்பட்ட உத்தரவை மீறி ஈப்போ பண்டார் மேரு ராயா உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த காட்சி சமுக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து அப்பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர்.

72 வயதுடைய அப்பெணி கடந்த ஜூலை 4 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் முதல் கட்ட பரிசோதனை மேற்கொண்டதில் கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறி இல்லாததால் 14 நாட்கள் வீட்டில் தனித்து இருக்கும் படி மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 6 ஆம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் தான் அந்த கடையில் அமர்ந்து உணவருந்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

14 நாட்களுக்குப் பின் 2-ஆவது பரிசோதனை மேற்கொண்ட போது அப்பெண் மற்றும் அவரின் மகனுக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகையால் இந்த புகைப்படம் ஜூலை 6 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகவும், அந்த சமயம் கடையில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு , மாநில சுகாதாரம், அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பக் குழுவுக்கு பொறுப்பேற்றிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் அகமாட் சாய்டி முகமட் டாவுட் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!