Latestஉலகம்

கோவிட் தடுப்பூசி குறித்த பொய் தகவலைத் தடுக்க, Google-லின் நிதி

கலிபோர்னியா, ஜன 13 – இணையத்தில் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான பொய்யானத் தகவல்களை முடக்குவதற்காக,  கூகள் ( Google) நிறுவனம்  30 லட்சம்  டாலர் பொது நிதித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இணையத்தில் வலம் வரும் கோவிட் -19 தொடர்பான தவறானத் தகவல்களை உடனடியாக கண்டறிந்து  அதனைச் சரி செய்யும் ஊடகப் பணிக்காக, அந்த நிதி பயன்படுத்தப்படுமென ,  அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவிட்  பெருந்தொற்று தொடர்பில் மக்களுக்கு சரியான , அவ்வப்போதைய தகவல்களைக் கொண்டுச் சேர்ப்பதில்  இணையம் முங்கிய பங்காற்றுகின்றது.

அதே வேளை,  குறிப்பிட்ட தரப்புகளை  குறிவைத்து அல்லது குழப்பும் நோக்கத்தில்  தவறானத் தகவல்களைப் பரப்பும் பொறுப்பற்றச் செயலும்  இணையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதை விரைந்து  தடுக்கும் வழிமுறைகளை முன் வைக்கும் தரப்புகள் அல்லது திட்டங்களுக்கு  அந்த நிதி வழங்கப்படும்.

அதற்கான விண்ணப்பங்களை,  கல்வியாளர்கள்,  மருத்துவ – லாப நோக்கமற்ற  துறைகளைச் சேர்ந்தவர்கள்,  WHO  உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்  பரிசீலிப்பர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!