Latestமலேசியா

கோவிட் தொற்றினால் வர்த்தக மையங்கள் மூடும் திட்டமா? சுகாதார அமைச்சு விளக்கம்

புத்ரா ஜெயா, செப் 29 – கிள்ளான் பள்ளத்தாக்கில் கோவிட் -19 தொற்று சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும் வர்த்தக மையங்கள் உட்பட சில இடங்களை மூடும் திட்டத்தை சுகாதார அமைச்சு கொண்டிருக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதிப்பு குறித்த மதிப்பீட்டை அமைச்சு மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

உணவகங்கள் போன்ற நெரிச்சல்மிக்க இடங்களாக இருந்தால் அதனை மூடுவது குறித்து நாங்கள் திட்டமிடுவோம். அதே வேளையில் விசாலமான மற்றும் பரவலான இடங்களாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் தனிப்பட்ட நபர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டால் அந்த இடத்தை தூய்மைப்படுத்தும்படி நாங்கள் ஆலோசனை தெரிவிப்போம் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நோர் ஹிஷாம் விவரித்தார்.

NU SENTRAL Mall. KL Gateway. Sunway Pyramid Mall மற்றும் Suria KLCC இடங்களில் அண்மையில் கோவிட் ஏற்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!