Latestசினிமா

கோவிட் தொற்றிலிருந்து ஆயுர்வேத மருத்துவத்தால் குணமடைந்தேன் – நடிகர் விஷால்

சென்னை, ஜூலை 27- கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தாம் ஆயுர்வேத மருந்தினால் முழுமையாக குணமடைந்ததாக நடிகர் விஷால் கூறியுள்ளார். தாமும் தமது அப்பாவும் கோவிட் தொற்றுக்காக 20 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பின் முழுமையாக மீண்டதாக அவர் சொன்னார்.
தொடக்கத்தில் தமது அப்பா ஜி,கே, ரெட்டிக்குத்தான் கோவிட் தொற்று ஏற்பட்டது. பிறகு தமக்கும் இந்த தொற்று பரவியது இந்த தொற்றிலிருந்து இப்போது தாமும் தமது தந்தையும் மீண்டு வந்துள்ளதாக விஷால் தமது முகநூலில் பதிவேற்றம் செய்த தகவலில் தெரிவித்துள்ளார்,
கோவிட் தொற்றுக்கான எல்லா அறிகுறியும் எனக்கு இருந்தன. முதல் ஒரு வாரத்திலேயே ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலனைக் கொடுத்தது. எனது தந்தை, நான் மற்றும் எனது நிர்வாகியும் கோவிட் தொற்றுக்கு உள்ளானோம். நாங்கள் அனைவரும் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டோம். அந்த சிசிக்சை எங்களுக்கு நல்ல பலனை தந்தது என்றும் விஷால் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!