Latestமலேசியா

கோவிட் தொற்றுடன் போராடி ஓராண்டாகிவிட்டது ; முடிவொன்று தெரியவில்லை !

புத்ராஜெயா, ஜன 25 – கோவிட்  தொற்றுடன் போராடி மலேசியா ஒராண்டு தாக்குப் பிடித்து விட்டது. ஆனால் அந்த போராட்டத்துக்கான  முடிவொன்று எட்டும் தூரத்தில் தென்படவில்லையென கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றார் சுகாதார தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ  நோர் ஹிஷாம் அப்துல்லா.

அந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் உடல்–மனிதளவில் சோர்வடைந்திருக்கலாம் . ஆனால், நம்பிக்கையை கைவிட  வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.

முறையாக முகக் கவசத்தை அணிந்தும், கைகளை அவ்வப்போது கழுவியும்,  தூரை இடைவெளியைக் கடைப்பிடித்தும், SOP நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மக்கள் எப்போதும் கடைப்பிடித்து வர  வேண்டும். அந்த பெருந்தொற்றிலிருந்து  நாட்டை காப்பாற்றும்  பொறுப்பு  அனைவருக்கும்  உண்டென  நோர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

அவசியம் இல்லையென்றால் வீட்டிலிருந்து கோவிட் பரவலைத் தடுப்போம் என அவர் தமது சமூக அகப்பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

சிங்கப்பூரிலிரிந்து ஜோகூருக்குள் நுழைந்த  சீனா, வூஹானைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மூலமாக நாட்டில், முதல் முறையாக,  மூன்று கோவிட்- 19தொற்று சம்பவங்கள் பதிவாகின.

தற்போது ஓராண்டு கடந்து விட்ட நிலையில், நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட்-19  தொற்று எண்ணிக்கை  ஒரு லட்சத்து 83 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. அந்த எண்ணிக்கையில்  77% விழுக்காட்டினர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த வேளை,   678 உயிரிழப்புகள் பதிவாகின.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!