Latestமலேசியா

கோவிட் தொற்று இல்லை; இந்தியாவின் சைய்னா நேவால் விளையாடுவதற்கு அனுமதி

பேங்காக், ஜன 13- இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் நட்சத்திரமான சைய்னா நேவலுக்கு (Saina Nehwal ) கோவிட் தொற்று இல்லையென மருத்துவ பரிசோதனையில் முடிவு காணப்பட்டதை தொடர்ந்து தாய்லாந்து பொது பேட்மின்டன் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்ற இந்தியாவின் மற்றொரு விளையாட்டாளரான HS Parannoyக்கும் கோவிட் பரிசோதனையின் முடிவிலும் கோவிட் இல்லையென கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவரும் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் , மற்றும் அனைத்துலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

அவ்விருவருக்கும் கோவிட் தொற்று இருப்பதால் அவர்கள் தாய்லாந்து பொது போட்மின்டன் போட்டியில் பஙகேங்கமாட்டர்கள் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டது. அவர்கள் கலந்துகொள்ளும் ஆட்டங்கள் மீண்டும் மறுபட்டியலிடப்பட்டுள்ளன.

இதனிடையே இன்று சைய்னா நேவல் மலேசியாவின் கிஷோனாவுடன் மோதுகிறார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!