Latestஉலகம்

கோவிட் தொற்று வைரஸ் 10 நாள் மட்டுமே பரவும்

அட்லாந்தா, அக் 3- கோவிட்-19 தொற்றின் வைரஸ் 10 நாள் மட்டுமே மற்றவர்களுக்கு பரவுக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் உடலில் பரவும் திறனுடன் இந்த வைரஸ் கூடியபட்சம் 20 நாட்கள்வரை இருக்கும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

மனுக்குலத்திற்கு பெரும் மிரட்டலாக இருந்துவரும் கோவிட் தொற்றுக்கான வைரஸ் மனித உடலில் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள முன்னணி மருத்துவ அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. இந்த வைரஸ் மனித உடலில் குறைந்தது மூன்று மாதங்கள்வரை இருக்கும் என்று வெளிவந்த தகவல் தவறான ஒன்றாகும்.

10 நாட்கள் மேல் உடலில் கோவிட் தொற்றின் வைரஸ் இருந்தாலும் அவை செயலற்றதாகவே இருக்கும். இந்த காலக்கட்டதில் மருத்துவ பரிசோதனை செய்தால் நோய்க்கான அறிகுறி இருப்தாக்கூட முடிவு வந்தாலும் அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என கூறப்பட்டது. இதன் காரணமாகவே குறைந்தபட்சம் 14 நாட்கள் மட்டும் தனித்திருந்தால் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!