
வாஷிங்டன், பிப் 24 – அமெரிக்காவில் கோவிட் -19 பெரும்தொற்றினால் மாண்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியது. இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அதிபரின் துணைவியார் ஜில் பைடன் மற்றும் துணையதிபர் கமலா ஹரிஸ்சும் கலந்துகொண்டனர்.
அதோடு அமெரிக்கா முழுதிலும் அந்நாட்டின் தேசிய கொடியை 5 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் ஜோ பைடன் உத்தரவிட்டார். அமெரிக்கா பங்கேற்ற மூன்று போர்களில் பலியானவர்களைவிட கோவிட் கோர தாண்டவத்தினால் அந்நாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.