
ஹைதரபாத், பிப் 22- கோவிட் -19 தொற்று தாக்கினால் நுரையீரல் மற்றும் இருதயம்தான் பாதிக்கப்படும் என பெரும்பாலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஹைதரபாத் உட்பட ஐந்து நகர்களில் மேற்கொள்ளப்பட் ஆய்வில் கோவிட் வைரஸ் உடலின் அனைத்து பகுதிகளையும் பாதித்துவிடும் என்பதை இந்திய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உட்பட உடலின் சிறிய உறுப்புக்களையும்கூட அந்த வைரஸ் பாதிக்கச்செய்துவிடும் என இந்திய அறிவியலாளர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புக்கள் மற்றும் மூளையையும் கோவிட் வைரஸ் பாதித்துவிடும். சுருக்கமாக கூறினால் தலையிலிருந்து கால் பாதம்வரை கோவிட் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் வீரியத்தை கொண்டுள்ளது. நாக்பூர், பாட்னா, ஹைதரபாத் ஆகிய இடங்களில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களிடம் மேற்கெள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களின் உடல் உறுப்புக்கள் எதிர்பார்க்கட்டதை விட எளிதில் பாதிக்கப்பட்டுள்ளதை இந்திய அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் இருதயம், நுரையீரல், கல்லீரல் மட்டுமின்றி ரத்த நாளங்களையும் சிறிது சிறிதாக பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.