Latestமலேசியா

கோவிட்-19 : ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு, மஸ்லீ மாலிக் கவலை!

கோலாலம்பூர், அக் 23 – நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது குறித்து, முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லீ மாலிக் (Maszlee Malik) கவலை தெரிவித்துள்ளார்.

இச்செய்தியறிந்த பின்னர், பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலை தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

7  முதல் 12 வயதுக்கிடைப்பட்ட 587 மாணவர்களும், 13 முதல் 18 வயதுக்கிடைப்பட்ட 670 மாணவர்களும், இந்த மூன்றாம் அலை கோவிட்-19 தொற்றில் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று சுகாதாரத் துறை தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா (Tan Sri Dr Noor Hisham Abdullah) அறிவித்திருந்தார்.

இதன் தொடர்பில் தமது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட மஸ்லீ, ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கலந்து பேசி, ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பிள்ளைகள் எப்போதும் சீரான விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிச் செய்ய, PIBG எனும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக பெற்றோர்களைப் , பள்ளி நிர்வாகத்துடன் கலந்து பேசும்படி மஸ்லீ,  கேட்டுக் கொண்டார்

அதே சமயம், எம்மாதிரியான முடிவுகளை எடுத்தாலும் அதில் ஆசிரியர்களின் ஆரோக்கியமும் முன்னிறுத்தப்படுவதை NUTP எனும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!