Latestமலேசியா

மலேசியாவின் முன்னாள் ஒலிம்பிக் ஓட்டக்காரர் தம்பு கிருஷ்ணன் காலமானார்

கோலாலம்பூர், டிச 21 – மலேசியாவின் முன்னாள் ஓட்டக்காரரான டத்தோ தம்பு கிருஷ்ணன் இன்று பினாங்கில் காலமானார்.

சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த அவர் தமது 81 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

1972 ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் கலந்துக் கொண்டவர் தம்பு கிருஷ்ணன் .

1966ஆம் ஆண்டு பேங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நால்வர் கலந்துகொண்ட 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் ஆசிர் விக்டர், பி .ரெங்கான் மற்றும் A.S நாதன் ஆகியோருடன் தம்பு கிருஷ்ணணும் கலந்து கொண்டு நாட்டிற்கு வெள்ளி பதக்கம் பெற்றுத் தந்தனர்.

தம்பு கிருஷ்ணன் முழு ஈடுபாடு கொண்ட ஒரு ஓட்டக்காரர் என்பதோடு ஓட்டப்பந்தய வீரராகவும் முன்னாள் பயிற்சியாளராகவும் பேரா மாநிலத்திற்கும் மலேசியாவிற்கும் அளப்பரிய பங்கை ஆற்றியதாக பேரா ஓட்டப்பந்த சங்கத்தின் தலைவர் டத்தோ கரீம் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரத்திற்கு முன் அவர் எந்தவொரு நோயுமின்றி நலத்துடன் இருந்ததாகவும் அவரது மரணச் செய்தி தமது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தம்பு கிருஷ்ணனின் மகன் கே. கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!