Latestஉலகம்

கோவிட்-19 : ஐரோப்பாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பேரிஸ், அக் 23 – ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த பத்தே நாட்களில் 2 மடங்காக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள், கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதனையடுத்து, ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சமாக உயர்வு கண்டுள்ளது. அதோடு ஐரோப்பாவில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் பேர் அந்நோய்த் தொற்றுக்குப் பலியாகியிருக்கின்றனர்.

இத்தாலி, ஆஸ்திரியா (Austria), குரோஷியா (Croatia), ஸ்லோவேனியா (Slovenia), போஸ்னியா (Bosnia) போன்ற ஐரோப்பிய நாடுகளில் நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தியா, பிரசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நேற்று ஒருநாளில் பதிவான மொத்த கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களை விட, ஐரோப்பிய கண்டத்தில் பதிவான சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும்.

உலகளாவிய நிலையில் பார்த்தாலும் நேற்று ஒரே நாளில் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதவாகியிருக்கின்றன. நேற்று உலகம் முழுவதும் ஏறக்குறைய 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் புதிதாக கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இதனையடுத்து உலகம் முழுவதும் மொத்த நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த மரண எண்ணிக்கை 11 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 12 லட்சம் பேர் இந்நோய்க் கிருமி பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!