Latestஉலகம்

கோவிட்-19 கடைசி பெருந்தொற்றாகாது ; WHO எச்சரிக்கை

ஜெனிவா, டிச 27- வானிலை மாற்றத்திற்கும், விலங்குகள் நலனுக்கும் ஒரு தீர்வு காணாத வரையில் , கோவிட் -19 உயிர்கொல்லி வைரஸ் , மக்களைத் தாக்கியிருக்கும் கடைசி பெறுந்தொற்றாகாது என  WHO -உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அடனோம்  ஜிப்ரியசஸ்  எச்சரித்துள்ளார்.

பணத்தை வாரி வீசி பொருந்தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முயற்சிக்கின்றது. ஆனால், அதற்குப் பிறகு,  அடுத்த எதிர்பாரா ஒரு நோயை எதிர்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியையும் எடுக்கத் தவறி விடுவதாக  அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பெருந்தொற்று மனித சுகாதாரத்திற்கும், விலங்குகள்- பூமிக்கும் இடையிலான  பிணைப்பை நன்கு உணர்த்தியிருக்கின்றது.

எனவே, விலங்குகள் நலனைப் பேணாது, வானிலை மாற்றத்திற்கு தீர்வு காணாது, மனித சுகாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பின்னடவையே  சந்திக்குமென ,   தெட்ரோஸ் கூறினார்.

பெருந்தொற்று தயார் நிலை மீதான முதல் அனைத்துலக  தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட   காணோலியில், உலக சமூகத்திற்கு தெட்ரோஸ் அந்த எச்சரிக்கையை விடுத்தார்.

கோவிட் 19பெருந்தொற்றினால், இதுவரை உலகம் முழுவதும் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!