Latestமலேசியா

கோவிட் -19 கைவளையத்தை துண்டித்து மருத்துவமனையிலிருந்து ஓடியவர் கண்டுபிடிக்கப்பட்டார்

ஜோர்ஜ்டவூன், நவ 16 – பினாங்கு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய , கோவிட் -19 சந்தேகத்தின் பேரில்  கண்காணிப்பில் இருந்த ஆடவர்,  நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டார்.

இரவு மணி ஒன்பது வாக்கில் பாயான் லெபாஸ் கடை வரிசையின் முன்,  23 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவனைப் பொது மக்கள் கண்டு தகவல் அளித்தனர்.

பின்னர் , அம்புலன்ஸில் அந்த நபரை ஏற்றிக் கொண்டு  சுகாதாரப் பணியாளர்கள் மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்த நபர், பினாங்கு மருத்துவமனையில் இருந்து பாயான் லெபாஸ் வரையில் 25 கிலோமீட்டர் தூரம் வரையில்  நடந்தே சென்றதாக நம்பப்படுகிறது.

நேற்று மாலை மணி 3.20க்கு , கெப்பாள பதாஸ்-சைச் சேர்ந்த அந்த நபர், அவரது கட்டிலில் இல்லாதது தெரிய வந்தது.

அவரது  கையில் அணிவிக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற கைவளையமும் துண்டிக்கப்பட்டு , கட்டிலில்  வைக்கப்பட்டிருந்தது.

அந்த ஆடவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதை பினாங்கு சுகாதார துறை இயக்குனர் டாக்டர் அஸ்மயானி காலிப் உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!