Latestஉலகம்

கோவிட்-19 : சிங்கப்பூரில் மேலும் இரு மலேசியர்கள் பாதிப்பு

சிங்கப்பூர், அக் 1 – சிங்கப்பூரில் மேலும் இரு மலேசியர்களுக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிப் படுத்தியுள்ளது.

அவ்விரு மலேசியர்களில் ஒருவர் 23 வயது ஆடவராவார். இதற்கு முன்பு கோவிட்-19 தொற்றுக்கு ஆளாயிருந்த நபருடன் அவ்வாடவர் தொடர்பில் இருந்ததை அடுத்து, அவருக்கும் அந்நோய்க்கிருமி பரவியுள்ளது.

மற்றொருவர் 31 வயது பெண். இதனை அடுத்து சிங்கப்பூரில் இவ்வாரம் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளான மலேசியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

அவர்கள் அனைவருமே வேலை அனுமதி அட்டையை வைத்திருப்பவர்கள் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் 23 புதிய கோவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டன.

அவற்றில் 4 வெளிநாடுகளில் இருந்த போது நோய்ப் பரவல் ஏற்பட்ட சம்பவங்களாகும். மேலும் 16 விடுதிகளில் தங்கியிருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது என அமைச்சு கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!