Latestமலேசியா

கோவிட்-19 தடுப்பு மருந்தின் தரவுகளுக்காக மலேசியா காத்திருக்கிறது

புத்ராஜெயா, நவ 22 – மலேசியா, கோவிட்-19 தடுப்பு மருந்தை வாங்குவதற்கு முன்பாக,  மூன்றாம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட  தடுப்பு மருந்துகளின் தயாரிப்பாளர்களிடமிருந்து ஆய்வு முடிவைப் பெறுமென  சுகாதார தலைமை  இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

தடுப்பு மருந்தின் பலனை அறியவும் , அந்த மருந்து பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்யவும் அந்த தகவல்கள் அவசியமென அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் 12, கோவிட்-19 தடுப்பு மருந்துகள்  மூன்றாம் கட்ட சோதனையை எட்டியிருக்கின்றன.

எனினும்,  அவற்றின் சோதனை முடிவுகள் சிலவற்றை ஊடகங்கள் மூலமாகவே தெரிந்துக் கொண்டிருக்கோம். அவற்றின் தரவுகள் முறைப்படி வெளியிடப்பட்ட பின்னரே,
பரிசீலித்தே,  தடுப்பு மருந்தை வாங்கும் முடிவை சுகாதார அமைச்சு எடுக்குமென,  டான் ஶ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மேலும்,  இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவிட் 19 தடுப்பு மருந்துகள்,  அமெரிக்க உணவு – மருந்து நிர்வாகத்துடன் பதிவு பெறவும் இல்லை.

மருந்துகளைப் போன்று , தடுப்பு மருந்துகளும் தேசிய மருந்தக கட்டுப்பாட்டு அமைப்பிடம் பதிவு செய்யப்பட வேண்டுமென சுகாதார தலைமை இயக்குநர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!