Latestமலேசியா

கோவிட்-19 தனித்திருக்கும் விதிமுறையை மீறிய ரமேஷ் குமாருக்கு ரிம 2,500 அபராதம்

ஜோர்ஜ் டவுன், ஆக 18 – கோவிட்-19 தனித்திருக்கும் உத்தரவை மீறிய தொழிற்நுட்பாளர் ரமேஷ் குமாருக்கு பாலேக் பூலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,500 ரிங்கிட் அபராதம் விதித்தது. தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 42 வயதுடைய ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

தனித்திருக்கும் உத்தரவை மீறி ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை 5.45 மணி அளவில் செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற கண்காட்சிக்கு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். 1988ஆம் ஆண்டின் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் 22ஆவது (b) விதிமுறையை மீறியதாக ரமேஷ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விதிமுறையை மீறினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படலாம். ரமேஷிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு கடுமையானது என்பதால் அவருக்கு 2,500 ரிங்கிட் அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் கலிஜா முகமட் காலிட் தீர்ப்பளித்தார். அதோடு இந்த அபாராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஐந்து நாட்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கும்படி ரமேஷிற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின்போது பலர் மூன்று மாதம் வீட்டில் இருந்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் வீட்டில் 14 நாட்கள் தனித்திருக்கும் உத்தரவை பின்பற்றியிருக்க வேண்டும். இதனை மீறியதை தாம் கடுமையாக கருதுவதாக அவர் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தபோது தெரிவித்தார். பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என இதற்கு முன் நீதிமன்றத்தை அரசு தரப்பு வழக்கறிஞர் ரைஸ் இம்ரான் ஹமிட் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!