Latestமலேசியா

கோவிட்-19 தொற்றால் 3,337 பேர் பாதிப்பு; 15 பேர் மரணம்  

கோலாலம்பூர், ஜன 14 –  நாட்டில்  இன்று மீண்டும் புதிய உச்சத்தில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை  பதிவாகியிருக்கின்றது.  அந்த தொற்றுக்கு புதிதாக 3, 337 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று பதிவான புதிய எண்ணிக்கையில்,  சிலாங்கூரில் தொடர்ந்து அதிகமாக 1, 036 பேரும், ஜோகூரில்  460 பேரும், சபாவில்   389 பேரும், கோலாலம்பூரில்  257 பேரும்  கோவிட் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றனர்.

இவ்வேளையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் -19 தொற்றால் 15 உயிரிழப்புகள் பதிவாகின. உயிரிழந்தவர்களில்  13 பேர் உள்நாட்டவர்கள்;  இருவர் அந்நிய நாட்டவர்கள் ஆவர்.

நாட்டில் கோவிட் -19 தொற்றுக்காக இன்னும்  32, 377 பேர்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  அவர்களில் 195 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் வேளையில்,  86 பேருக்கு சுவாச  உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று மேலும்  1, 710 பேர்  தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!