Latestமலேசியா

கோவிட்-19 தொற்றின் தாண்டவம் மோசமடைகிறது; 919 பேர் பாதிப்பு – தீவிர சிகிச்சை பிரிவில் 92பேர்

புத்ரா ஜெயா , நவ 12- கோவிட் தொற்றின் மூன்றாவது அலை நாட்டில் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இரண்டு நாட்களகாக 822 மற்றும் 869 ஆக இருந்த தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் வகையில் 919 ஆக உயர்ந்தது.

இதன் வழி நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 43,791ஆக அதிகரித்துள்ளது . இன்னமும் 11,419 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சபாவில் மட்டும் 318 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்த நிலையில் நெகிரி செம்பிலானில் 240 பேரும் , சிலாங்கூரில் 174பேரும் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பினாங்கில் 63 பேரும், கோலாலம்பூரில் 47பேரும் லபுவானில் 35பேரும் புதிதாக தொற்றுக்கு உள்ளாகினர். பேராவில் 9 பேரும் சரவாக்கில் 8 பேரும், ஜோகூரில் 8 பேரும், மலாக்காவில் 8 பேரும், கெடாவில் 3 பேரும், கிளந்தானில் 2பேரும் புத்ரா ஜெயாவில் ஒருவரும் தொற்றுக்கு உள்ளாகினர்.

கோவிட் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 996 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தீவிர சிகிச்சை பிரிவில் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 35 பேருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சபாவில் புதிதாக மேலும் ஒரு தொற்று மையம் கோத்தா கிணபாலுவில் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!