Latestமலேசியா

கோவிட் -19 தொற்றுக்கு இன்று 935 பேர் பாதிப்பு மூவர் மரணம்

புத்ரா ஜெயா, நவ 26 – நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை   935 ஆகியது.   தொற்றுக்குள்ளானவர்களில்  931 பேர் உள்நாட்டை சேர்ந்தவர்கள். இதர நால்வர் வெளிநாட்டில் இருந்தபோது இந்த தொற்றுக்கு உள்ளாகினர்.  இதன்வழி  கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை  60,752 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறையின்  தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

மருத்துவமனையிலிருந்து குணமடைந்த 2,555 பேர் வீடு திரும்பினர், இதன்வழி  இதுவரை இந்த  நோயிலிருந்து  49,056 பேர் முழுமையாக குணம் அடைந்துள்ளனர். இன்னமும்  11,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தீவிர சிகிச்சை பிரிவில்   110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மேலும் மூவர் மரணம் அடைந்ததால்  கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   348 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தொற்றுக்கு உள்ளானவர்களில்  326 பேர் சபாவைச் சேர்ந்தவர்களாவர்.  சிலாங்கூர் மாநிலத்தில் இன்று தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  161 ஆக குறைந்தது. மேலும்  நெகிரி செம்பிலானில் 158  பேரும்,  கோலாலம்பூரில் 59 பேரும் , பேராவில்  79 பேரும் , ஜோகூரில்  60 பேரும்  கெடாவில்  24 பேரும் தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. சபா, கிளந்தான், ஜொகூர் , பினாங்கு, கோலாலம்பூரில் 6 தொற்று மையங்கள் கண்டறியப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!