Latestமலேசியா

கோவிட் 19- தொற்றுக்கு 4,275 பேர் பாதிப்பு எழுவர் மரணம்

புத்ரா ஜெயா, ஜன 23- நட்டில் கோவிட் தொற்றின் 3ஆவது அலை தொடர்ந்து மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்றுக்கு 4,275 பேர் உள்ளாகினர். கடந்த சனிக்கிழமைக்கு பிறகு மீண்டும் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. இதுவரை நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,455 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் இன்று 4,313 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை தொற்றிலிருந்து முழுமையாக 137,019 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 7பேர் உயிரிழந்தனர். நாட்டில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 667 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 42, 769 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் 260 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில் சுவாச கருவியின் உதவியோடு 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலாங்கூரில் மட்டும் 1,421 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு இன்று உள்ளாகினர். அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 548 பேரும், சபாவில் 498 பேரும், ஜோகூரில் 425 பேரும், மலாக்காவில் 278 பேரும் , பேராவில் 208 பேரும், சரவாவில் 193 பேரும் தொற்றுக்கு உள்ளாகினர்.

மேலும் பினாங்கில் 162 பேரும், திரங்கானுவில் 131 பேரும், நெகிரி செம்பிலானில் 108 பேரும், கெடாவில் 105 பேரும், கிளந்தானில் 78 பேரும், பகாங்கில் 75 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!