Latestமலேசியா

கோவிட் -19 தொற்று கோலாலம்பூர் UOB கிளை தற்காலிகமாக மூடப்பட்டது

கோலாலம்பூர், செப் 22- தனது பணியாளர்களில் ஒருவர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து UOB எனப்படும் United Overseas Bank கோலாலம்பூரில் உள்ள கெப்போங் கிளையை இன்று முதல் தற்காலிமாக மூடியது. அந்த வங்கி கிளையை தூய்மைப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சபாவிலிருந்து திரும்பிய அந்த வங்கியின் பணியாளருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பின் இந்த வங்கிக் கிளை மீண்டும் திறக்கப்படும் என UOB இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது. கோலாலம்பூர் கெப்போங் UOB கிளையின் அடமானப் பிரிவின் பணியாளர் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் செப்டம்பர் 13ஆம் தேதிவரை சபாவில் Lahat Datu மற்றும் Semporna சென்று வந்ததைத் தொடர்ந்து அவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பணியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்களுக்கு தனித்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். நாங்கள் சுகாதார அதிகாரிகளுடன் அணுக்கமாக தொடர்பு கொண்டுவருகிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!