Latestமலேசியா

கோவிட் -19 தொற்று; செராஸ் IKEA பேரங்காடி மூடப்பட்டது  

கோலாலம்பூர், ஜன 25 – பாதுகாவலர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று  உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து,  செராஸ்- சிலுள்ள வீட்டுத் தளவாடங்களை விற்பனை செய்யும் IKEA பேரங்காடி  தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

கோவிட் -19 தொற்று கண்டிருக்கும்  சம்பந்தப்பட்ட  பாதுகாவலர் கடைசியாக , அந்த பேரங்காடியில் சனிக்கிழமை வேலைக்கு வந்திருந்ததாக, IKEA அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தது.

அந்த பேரங்காடியில் பணிபுரியும் அனைத்து பாதுகாவலர்களும் கோவிட் -19 மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.  சுகாதார  அமைச்சின் அடுத்த உத்தரவுக்கு காத்திருக்கும் வரையில் , அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பணியாளர்கள்,  வாடிக்கையாளர்கள்,  வர்த்தக பங்காளிகள் ஆகியோரின் நலன் கருதி , செராஸ்-சிலுள்ள  தங்களது பேரங்காடி மூடப்படுவதாக, IKEA  குறிப்பிட்டது.

பேரங்காடியில் கிருமி நாசினி தெளித்து துப்புறவு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு, சுகாதார அமைச்சின் வழிகாட்டியைக் கொண்டு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவதாகவும்  அந்த பேரங்காடி தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!