
ஜெனிவா, ஜன 14- இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு கோவிட் தொற்று பரவல் மேலும் மோசமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை உலகாளவிய நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி வருகிறது. புத்தாண்டின் முதல் இரண்டு வாரத்தில் கோவிட் தொற்று உலகம் முழுவதிலும் 50 லட்சம் பேருக்கு புதிதாக பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரி மைக் ரயான் (Mike Ryan) கூறினார்.
பிரிட்டனில் உருவான கோவிட் தொற்றின் புதிய பிறழ்வு தற்போது உலகில் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் கோவிட் தொற்றின் தாக்கம் மேலும் மோசமாக இருக்கும் என மைக் ரயான் (Mike Ryan) சுட்டிக்காட்டினார்.